லண்டனை சேர்ந்த 14 வயது சிறுமி தொடர்பில் வைக்கப்பட்ட அவசர கோரிக்கை! புகைப்படத்துடன் தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் 14 வயது சிறுமி தொடர்பில் பொலிசார் அவசர கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

மேற்கு லண்டனை சேர்ந்த 14 வயது சிறுமியான Lillian Loveridge 10 நாட்களாக காணாமல் போயுள்ளார்.

அவர் கடந்த 12ஆம் திகதி கடைசியாக Hayesல் மாலை 3.15 மணியளவில் காணப்பட்டார்.

இதன்பின்னரே Lillian Loveridge மாயமாகியிருக்கிறார்.

சிறுமி குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனே எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என பொலிசார் அவசர கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சிறுமி Lillian Loveridge சிவப்பு நிற உடையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை மேற்கு லண்டன் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் காணாமல் போன அன்று Lillian Loveridge அதே உடையில் இருந்தாரா என்ற விபரம் தெரியவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்