வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரித்தானியர்கள் 2 பேருக்கு 1000 பவுண்ட் அபராதம்! எதுக்கு தெரியுமா? எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

வெளிநாட்டில் இருந்து பிரித்தானியாவிற்கு திரும்பிய ஆண் மற்றும் பெண் இருவர் சுயமாக தனிமைப்படுத்து கொள்வதை மீறியதால், அவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 6000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்நாட்டு அரசு பல கடுமையான விதிகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது. கொரோனாவின் விதிகளை பின்பற்ற தவறினால், கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

இந்நிலையில் 20 வயது பெண் ஆசிரியர் ஒருவர் நெதர்லாந்தின் தலைநகர் Amsterdam-க்கு விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்ற இவர், அதன் பின் நாடு திரும்பியவுடன் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தி கொள்ளாமல், கொரோனாவின் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் ஒன்றாக அழைக்கப்படும், போல்டனில் இருக்கும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.

இதே போன்று 40 வயதில் தொழிலதிபர் ஒருவர் ஸ்பெயினில் இருந்து திரும்பிய சில நாட்களில் வேலைக்கு சென்றுள்ளார்.

இரண்டு பேருமே கொரோனாவின் சுய தனிமைப்படுத்துதல் விதிகளை பின்பற்ற தவறியதால், அவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பேர் குறித்த தகவல்களை மான்செஸ்டர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத துவக்கத்தில் போல்டன் எம்.பி. கிறிஸ் கிரீன் ஸ்பெயினில் விடுமுறையிலிருந்து திரும்பி வந்து பப்பிற்கு சென்று திரும்பியவர், போல்டனில் புதிய வழக்குகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

போல்டனில் உள்ளூர் ஊரடங்கு இரண்டு வாரங்கள் இருந்தபோதிலும், தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது.

சமீபத்திய பொது சுகாதார இங்கிலாந்து புள்ளிவிவரங்களின்படி, இந்த நகரம் செப்டம்பர் 19 முதல் ஏழு நாட்களில் 100,000 பேருக்கு 209 வழக்குகளை கொண்டுள்ளது.

பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ள, அந்த இரண்டு பேரில், ஆசிரியர் டார்வன் பகுதியைச் சேர்ந்தவர். இவர் msterdam-க்கு சென்று திரும்பிவிட்டு, போல்டனில் உள்ள தனது பள்ளிக்கு வேலைக்காக திரும்பிய போது 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 22-ஆம் திகதி, அதாவது செவ்வாயன்று அந்த பெண் அதிகாரிகளால் பார்வையிடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

40 வயது நபர் ஹார்விச் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 20-ஆம் திகதி ஸ்பெயினில் இருந்து திரும்பியுள்ளார். அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டார்.

ஆனால், அவர் அதை கண்டு கொள்ளமால், தொழிலுக்கு திரும்பியதால், அவருக்கும் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜோடியால் யாராவது வைரசிற்கு சாதகமாக சோதனை செய்தார்களா என்பது குறித்து பொலிஸ் எதுவும் கூறவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்