பிரித்தானியாவில் இன்று முதல் அறிமுகமாகும் விதிகளும் அவற்றிலுள்ள ஓட்டைகளும்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் நிலையில், அவற்றில் பல ஓட்டைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது விதிகளிலிருந்து தப்பிக்கொள்ளவும் வழிவகை உள்ளது.

10 மணிக்குமேல் மதுபானம் கிடைக்காது, ஆனால் கிடைக்கும்

மதுபான விடுதிகள் இரவு 10 மணிக்கு மூடப்படும், ஆனால், இரவுக்காட்சிக்கு சினிமா பார்க்கச் சென்றால், சினிமாவுக்கு டிக்கெட் எடுக்கும்போதே கையோடு ஒரு மதுபான போத்தலையும் வாங்கிக்கொண்டு சென்று சினிமா பார்த்துக்கொண்டே குடிக்கலாம்.

ஏனென்றால், தியேட்டரில் சினிமா 10 மணிக்கு முன்னதாகவே தொடங்கிவிடும். 10 மணிக்குப் பிறகுதானே மது விற்கக்கூடாது...

புதிதாக காதலிக்கத் தொடங்கியவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

புதிதாக காதலிக்கத் தொடங்கியவர்கள் சமூக விலகல் விதிகளை பின்பற்றுவதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கண்டவருடன் எல்லாம் உடல் ரீதியான உறவு வைத்துக்கொள்ளக்கூடாது.

இன்னொருவர் வீட்டில் தங்கலாம், ஆனால், வீட்டில் ஆறு பேருக்கு குறைவாக இருக்கவேண்டும், வீட்டில் இருப்பவர்கள் இடைவெளி விட்டே பழகவேண்டும்.

குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை உறவினர்கள் பார்க்கக்கூடாது (நேரில்)

குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆறு பேருக்கு மட்டுமே அனுமதி, அதாவது குழந்தையையும் சேர்த்து.

அப்படியானால், கண்டிப்பாக குழந்தையின் இரண்டு தாத்தா பாட்டிகளும் நெருங்கிய உறவினர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது.

மெக்டொனால்ட்சில் உணவு வாங்கலாம் ஆனால் மது வாங்கக்கூடாது

மெக்டொனால்ட்சில் உணவு ஆர்டர் சேய்யலாம், ஆனால் கூடவே மதுபானம் ஆர்டர் செய்யக்கூடாது. அப்படி மதுபானம் வழங்க உரிமம் பெற்ற இடம் என்றால் அங்கு உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும்.

குடிப்பவர்கள் சமூக அடைவெளியை பின்பற்ற மறந்துவிடுவதால் கொரோனா பரவுவதாக அரசு கருதுகிறது.

பொதுமக்களுக்கு மட்டும் ஒரு விதி (அமைச்சர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் அல்ல)

அமைச்சர்களும் கோடீஸ்வரர்களும் சாரதி வைத்துக்கொண்டு காரில் செல்லும்போதுமாஸ்க் அணியத்தேவையில்லை. ஆனால் டாக்சியில் நீங்கள் சென்றால் நீங்கள் மாஸ்க் அணியவேண்டும்.

(ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் காரில் செல்லும்போது மாஸ்க் அணிவேன் என்று கூறியுள்ளார்). உபேர் போன்ற தனியார் வாகனங்களில் செல்லும்போது சாரதிகளும், பயணிகளும் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்