எனக்கு ஊதிய உயர்வு வேண்டாம்... பிரித்தானிய மகாராணியார் அறிவிப்பு: வெளியான நெகிழ்ச்சி காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் ஊதிய வெட்டுக்களை சந்தித்து வரும் நிலையில், எனக்கு மட்டும் ஊதிய உயர்வு வேண்டாம் என்று கூறியுள்ளார் பிரித்தானிய மகாராணியார்.

மகாராணியாரைப் பொருத்தவரை, அவரது வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

நாடு முழுவதும் மக்கள் கொரோனாவின் தாக்கத்தை அனுபவித்துவருவதை புரிந்துகொண்டுள்ள மகாராணியார், அவர்கள் எப்படி சமாளிக்கிறார்களோ அதே நிலைமைதான் அரண்மனையிலும் இருக்கவேண்டும் என கருதுவதாக அரண்மனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதாவது வருவாய் குறைவு என்பதற்காக, பணியாளர்களை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வேலையை விட்டு அனுப்பப்போவதில்லை என அரண்மனை வட்டாரம் முடிவு செய்துள்ளதாம்.

கொரோனாவின் தாக்கம் எப்படி பொதுமக்களின் வருவாயை பாதித்துள்ளதோ அதேபோல மகாராணியாரின் வருவாயையும் பாதித்துள்ளது.

எஸ்டேட் வாடகை மற்றும் சுற்றுலா பாதிப்பால் அவரது வருவாயில் 35 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு குறைந்துள்ளது.

இந்த குறைவை நிவர்த்தி செய்ய அதிக பணம் சேகரிப்பதற்கு பதிலாக, இருப்பதைக்கொண்டே பணிகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இம்முறை தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என மகாராணியாரும் கூறிவிட்டாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்