பிரித்தானியாவில் மகனுடைய பிறந்தநாள் விழாவுக்காக சென்று கொண்டிருந்த சாரதி: போதையில் கார் ஓட்டியவரால் நேர்ந்த சோகம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது மகனுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வீடு திரும்பிக்கொண்டிருந்த டாக்சி சாரதி ஒருவர், போதையில் கார் ஓட்டிய ஒருவரால் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் குர்தீப் சிங் மதாரு தனது பணியை முடித்துவிட்டு தன் மகனுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மின்னல் வேகத்தில் தவறான பாதையில் வந்த கார் ஒன்று குர்தீப் சிங்கின் கார் மீது பயங்கரமாக மோத, அவரது கார் தூக்கியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அவர்.

அவருடைய கார் மீது மோதிய காரிலிருந்த கிங் ஈசோன் (25)என்னும் நபர் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் போதைப்பொருளின் கட்டுப்பாட்டில் இருந்தது தெரியவந்தது. இரவு முழுவதும் போதைப்பொருள் அருந்திட ஈசோன், யாரோ ஒருவருடைய காரை எடுத்துக்கொண்டு அதி வேகமாக காரை செலுத்தி வந்துள்ளார்.

முதலில் ஒரு லொறி மீது மோதிவிட்டு, பின்னர் சிக்னலில் நிற்காமல் மணிக்கு 30 மைல் வேகத்தில் செல்லவேண்டிய சாலையில், மணிக்கு 61 மைல் வேகத்தில் செல்லும்போதுதான் குர்தீப் சிங்கின் கார் மீது மோதியுள்ளார்.

மகனுடைய பிறந்தநாள் விழாவைக் காணமலேயே சாலை ஓரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் குர்தீப் சிங்.

கைது செய்யப்பட்ட ஈசோன் மீது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டுதல், இன்னொருவருடைய காரை அவரது அனுமதியின்றி எடுத்து ஓட்டுதல், காப்பீடு மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி கார் ஓட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், விடுதலையானபின் மூன்று ஆண்டுகளுக்கு கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈசோன் ஜிம்பாபே நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், தண்டனைக் காலத்திற்குபின் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.

போதையில் கார் ஓட்டினால் ஏற்படும் பின் விளைவுகளை காட்டுவதற்காக, கார்கள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்