பிரித்தானியாவில் தனியாக தெருவில் செய்வதறியாமல் தவித்த 2 வயது குழந்தை! பெற்றோர் எங்கே என்று கேட்ட போது?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன், செய்வதறியாமல் தனியாக கண்கலங்கிய நிலையில் நின்றுள்ளான்.

பிரித்தானியாவின் ஹல் வீதியில் கடந்த சனிக் கிழமை 2 வயது மதிக்கத்தக்கதாக கருதப்படும் சிறுவன் தனியாக செய்வதறியாமல், ஒரு குழப்ப நிலையிலே நின்றுள்ளான்.

அப்போது அந்த வழியே சென்ற நபர் குறித்த சிறுவனின் நடவடிக்கையை கண்டுள்ளார். இதனால் அந்த சிறுவனின் அருகில் சென்று கையை பிடித்தபடி நின்றுள்ளார்.

அதன் பின் இது குறித்து அருகில் இருக்கும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொலிசார் ஒருவர் சிறுவனின் அருகில் வந்து, அந்த சிறுவனிடம் எங்கு வசிக்கிறாய்? பெற்றோர் எங்கே என்று கேட்ட போது? கண்ணீர் விட்டு அழுதுள்ளான்.

அதன் பின் சிறுவனை அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் உறவினர்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் அது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்