இங்கிலாந்தில் இன்றுமுதல் தனிமைப்படுத்தலுக்கு மறுப்பது சட்டவிரோதம்: அபராதம் எவ்வளவு தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
666Shares

இங்கிலாந்தில் இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு மறுப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்த மறுத்தால், அவர்களுக்கு 10,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

கொரோனா சிகிச்சை செய்யும்போது ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தெரியவந்தாலோ, அல்லது கொரோனா தொற்றிய ஒருவருடன் அவர் தொடர்பிலிருந்ததாக தெரியவந்தாலோ, அவர்கள், சட்டப்படி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

சமீபத்தில் அரசு மேற்கொண்ட ஆய்வு ஒன்று, கொரோனா அறிகுறிகள் கொண்டவர்களில் வெறும் 18 சதவிகிதத்தினர் மட்டுமே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படும் ஒருவர், உத்தரவுக்கு மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

EPA

தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு 1,000 பவுண்டுகள் முதல் 10,000 பவுண்டுகள் வரை மீறலின் தீவிரத்தைப் பொருத்து அபராதம் விதிக்கப்படும்.

அதிக கொரோனா பரவல் காணப்படும் பகுதிகள் மற்றும் அதிக கொரோனா அபாயம் உள்ள பகுதிகளில் பொலிசார் சோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

ஆகத்து மாத இறுதி நிலவரப்படி, கொரோனா விதிகளை மீறிய 19,000க்கும் அதிகமானோருக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்