பிரித்தானியாவில் இவர்களுக்கு மட்டும் குடிப்பதற்கு தடையேதும் இல்லையாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
460Shares

நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் மதுபான விடுதிகளுக்கு மட்டும், பிரித்தானியாவில் இரவு 10 மணிக்கு மேல் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பொருந்தாதாம்.

வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகைக்குள் இருக்கும் மதுபானம் வழங்கும் அமைப்புகள் மட்டும் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரங்கிற்கு கட்டுப்பட வேண்டியதில்லை, காரணம், அவை வேலையிடத்தில் உள்ள உணவகம் என்ற வகைப்பாட்டுக்குள் வருவதால்தான்.

சென்ற வாரம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்தார்.

PA

அவற்றில் இங்கிலாந்திலுள்ள மதுபான விடுதிகள், உணவகங்கள் முதலான அமைப்புகளுக்கு, இரவு 10 மணிக்குமேல் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கும் அடங்கும்.

ஆனால், மதுபான விடுதிகள், உணவகங்கள் முதலான அமைப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், நாடாளுமன்றத்தினுள் உள்ள மதுபான விடுதிகளுக்கு வருவோர் மட்டும் இரவு 10 மணிக்குமேல் விடுதிகளைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, அங்குள்ள மதுபான விடுதிகளுக்கு வருவோர், மற்றவர்களைப்போல தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் முதலானவற்றை தெரிவிக்கவேண்டியதும் இல்லை என டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்