பிரித்தானியாவில் நடந்த மனதை கனக்கச் செய்த சம்பவம்! மணமேடை நோக்கி வந்த மணமகள் நிலைகுலைந்து விழுந்த துயரம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
4233Shares

பிரித்தானியாவில் மணமகள் ஒருவர், மணநாளன்று மணமேடையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு நோய் தாக்கி கீழே சரிந்த சம்பவம் மனதை கனக்கச் செய்துள்ளது.

வேல்ஸின் Rhymney Valleyயைச் சேர்ந்த Hayley Hale, தனது காதலர் Matthew Haleஐ மணமுடிப்பதற்காக மணமகள் கோலத்தில் தேவாலயத்திற்குள் நடந்துகொண்டிருக்கிறார். மணமகன் Matthew ஆசையுடன் காதலியை திரும்பிப் பார்க்கிறார்.

Hayleyயைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைக்கிறார்கள் அவரது பெற்றோர். ஆனால், சரியாக மணமேடையை அடைந்ததும் நிலைகுலைந்து விழுகிறார் Hayley. சட்டென மணமகன் தனது வருங்கால மணமகளை தாங்கிப் பிடிக்க, அவரது பெற்றோர் பதற, திருமணத்துக்கு வந்த பலர் கதறுகிறார்கள்.

புற்றுநோயை வென்று, புற்றுநோயிலிருந்து மீண்டாலும், பெண்ணுக்கே உரிய மார்பகங்கள், கருப்பை என முக்கியமான உறுப்புக்களை இழந்தவர் Hayley.

தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சை, உறுப்புகள் அகற்றம் என பாடுபட்டதோடு, தினமும் வலிப்பு வரும் Hayleyக்கு. திருமணம் செய்துகொள்ள அவ்வளவு ஆசை என்றாலும், வலிப்பு வந்துவிடுமோ என பயந்தே திருமணத்தை தள்ளிப்போட்டுவந்தார் அவர்.

இருந்தாலும், காதலரின் துணையோடு எப்படியாவது இந்த வலிப்பை மீறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், சரியாக திருமணம் அன்றும் வந்துவிட்டது அந்த பாழாய்ப்போன வலிப்பு.

Hayley கண் விழித்தபோது, தான் தன் காதலர் Matthew தன்னைத் தாங்கிப் பிடித்திருப்பதைக் கண்டு சுதாரித்து எழுந்துகொண்டு, எனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாக இருக்கிறேன் என்று சத்தமிட, திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்திருக்கிறார்கள்.

திருமணம் இப்போது என்றாலும், ஏற்கனவே Hayleyக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது மிகவும் ஆறுதலான ஒரு விடயம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்