கொரோனா விடயத்தில் பிரித்தானியா ஆபத்தான நிலையில் உள்ளது: பிரதமர் போரிஸ் ஜான்சன்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனா விடயத்தில் பிரித்தானியா ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறியுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், அதனால்தான் நமது திட்டம் அத்தியாவசியமாகிறது என்கிறார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்படும் புதிய விதிகள் பலனளிக்க காலம் எடுத்துக்கொள்ளும் என்கிறார் அவர்.

தேவையானால் மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க தயங்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார் அவர்.

இதற்கிடையில், தலைமை அறிவியல் ஆலோசகரான Sir Patrick Vallance, இப்போதைக்கு கொரோனா நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.

எனவே கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்ற மன நிறைவை அடைவதற்கான காரணம் எதுவுமே இல்லை என்றார் அவர்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் மேலும் 7,108 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள், 71 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்