முககவசம் அணியாத பிரித்தானிய பிரதமரின் தந்தை! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

பிரிட்டன் பிரதமரின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் முககவசம் அணியாமல் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்கும் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையானது 3.40 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், பல நாடுகளில் சுகாதார கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தையான ஸ்டான்லி ஜான்சன் பல்பொருள் அங்காடியில் முககவசம் இன்றி பொருட்களை வாங்கும் காட்சி அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அந்நாட்டு அரசாங்கம் பொது வெளியில் முககவசம் அணியாத நபர்களுக்கு 200 பவுண்ட் அபராதத்தினை உயர்த்தி அறிவித்திருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து ஸ்டான்லி ஜான்சன் தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும், தான் தற்போதுதான் வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததாகவும், அதன் காரணமாக புதிய வழிமுறைகள் குறித்து தன்னுடைய தகவல் அறியாமையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

GOFFPHOTOS.COM

இது போன்ற நிகழ்வானது பிரிட்டனில் நடப்பது இது முதல் முறையல்ல. முன்னதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் ஒரு நிகழ்ச்சியில் 9 பேருடன் பங்கேற்றிருந்ததற்காக வருத்தத்தினை தெரிவித்திருந்தார். பிரிட்டனில் 6 நபர்களுக்கு மேல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என்கிற விதிமுறை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டான்லி ஜான்சனின் முககவசம் இல்லாத புகைப்படமானது முதலில் ஓரு தனியார் பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தது.

முன்னதாக ஸ்டான்லி ஜான்சனின் மகனும் பிரிட்டன் பிரதமருமான போரிஸ் ஜான்சன், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கடைப்பிடிக்கத் தவறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஸ்டான்லி ஜான்சன், “கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் தவறியதற்கு வருந்துகிறேன். ஒவ்வொருவரும் தனக்கான கடமையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

மேலும், தான் வெளிநாட்டிலிருந்து பிரிட்டன் வந்திறங்கிய முதல் நாளில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஸ்டான்லி ஜான்சன் கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கிரீஸ் நாட்டிற்கு சென்றதற்காக கடும் விமர்சனத்தினை எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்