மிக விரைவில் லண்டனில் இந்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்! நகர மேயர் எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

பிரத்தானியா தலைநகர் லண்டன் உயர் எச்சரிக்கை பகுதியாக மாறும் விளிம்பில் இருப்பதாக அந்நகர மேயர் சாதிக் கான் எச்சரித்துள்ளார்

அதாவது பிரத்தானியாவின் இரண்டாவது கட்ட கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் லண்டனில் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு மிக விரைவில், இந்த வாரம் எடுக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறிய கான், இந்த மாற்றத்தை ஆதரிப்பேன் என்றும் கூறினார்.

இந்த காட்டுப்பாடுகள் மூலம் வெவ்வேறு வீட்டார்க்ள உட்புறங்களில் சந்திக்க தடை விதிக்கப்படும்.

ஆனால் மேலும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டுமானால் நகரத்தில் வியாபரமின்றி போராடும் வணிகங்களுக்கு அதிக நிதி உதவி தேவை என பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சாதிக் கான் கடிதம் எழுதியுள்ளார்,.

லண்டனில் நேற்று 1,722 புதிய கொரோனா வழக்குகள் பதிவானது மற்றும் 1,00,000 பேருக்கு 730-க்கும் என்ற கணக்கில் அதிகமான தொற்று வீதத்தைக் கொண்டுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் ஒன்பது பிராந்தியங்களில் லண்டன் ஆறாவது இடத்தில் உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்