சனிக்கிழமையிலிருந்து பிரித்தானியா தலைநகரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா

பிரத்தானியா தலைநகர் லண்டன் நகரில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் சனிக்கிழமையிலிருந்து இரண்டாவது கட்ட கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.

லண்டனில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என எம்.பி-க்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் நகரில் முதற்கட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.

அதாவது லண்டன் உயர் எச்சரிக்கை பகுதியாக மாறியுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே மற்றவர்களுடன் பழகக்கூடாது, பப்கள் மற்றும் உணவகங்களில் போன்ற உட்புறங்களில் சந்திக்க தடை விதிக்கப்படும்.

ஏற்கனவே 6 பேருக்கு மேல் கூடக்கூடாது மற்றும் பப், உணவகங்கள் கட்டாயமாக 10 மணிக்கு மூட வேண்டும் என நாடு தழுவிய அளவில் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் லண்டனில் கூடுதலாக கட்டுப்பாடுகள் வதிக்கப்படும்.

சுகாதார அமைச்சர் ஹெலன் வாட்லியுடனான கூட்டத்தில் புதிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுக்கு தற்போது விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.

லண்டன் மக்களை பாதுகாக்க இந்த கட்டுப்பாடுகள் தேவை என தெரிவித்துள்ள மேயர் சாதிக் கான், தேசிய அளவில் நடவடிக்கை தேவை எனவும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்