அம்மா என்ன சொல்வார்கள்?: காதலியைக் கொன்றுவிட்டு கதறியழுத நபர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில், தனக்கும் செவிலியர் ஒருவருக்கும் இருந்த தவறான உறவு குறித்து அவர் தன் மனைவியிடம் கூறிவிடுவார் என்று பயந்து அந்த செவிலியரை கொலை செய்துள்ளார் பொலிசார் ஒருவர்.

Timothy Brehmer (55) என்பவர் தனது கையை அறுத்துக்கொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அவரிடம் சென்றுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் அவர் தரையில் அமர்ந்திருக்க, அவரிடம் பொலிசார் செல்லும்போது, அருகிலிருந்த திறந்திருந்த கார் ஒன்றிலிருந்து ஒரு பெண் வெளியே சரிந்து கிடப்பதைக் கண்ட ஒருவர், பொலிசாரை அந்த பெண்ணை சோதிக்குமாறு கூறியுள்ளார்.

பொலிசார் அந்த பெண்ணிடம் சென்று பார்க்கும்போது, கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலையில் அவர் இருக்க, அந்த பெண்ணுக்கும் முதலுதவி செய்ய மருத்துவ உதவிக்குழுவினர் முயன்றுள்ளனர்.

ஆனால், அதற்குள் அந்த பெண் உயிரிழந்துவிட்டார். அந்த பெண் ஒரு செவிலியர் என்பதால், முதலுதவிக்கு சென்ற மருத்துவ உதவிக்குழுவினருக்கு அவரை அடையாளம் தெரிந்திருக்கிறது. அவரது பெயர் Claire Parry (41).

நடந்தது என்னவென்றால், Claire Parryக்கும் பொலிசாரான Timothyக்கும் 10 ஆண்டுகளாக தவறான உறவு இருந்திருக்கிறது. இருவருக்குமே திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், Timothyயுடன் தனக்கு இருக்கும் உறவு குறித்து அவருடைய மனைவியிடம் கூறிவிடுவதாக கோபமாக மிரட்டியிருக்கிறார் Claire.

உண்மை தெரிந்தால், தன் பிள்ளைகளை பிரிந்துவிட நேரிடும் என்று அஞ்சிய Timothy, காரில் வைத்து அவரை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டார்.

இந்த உண்மைகளை தனது வாயால் கூறிய Timothy, தவறு செய்து விட்டேன், பாவம் அவளுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள், என்னைத்தான் கொல்ல நினைத்தேன், ஆனால், அவளைக் கொன்று விட்டேன் என்று புலம்பியிருக்கிறார்.

அத்துடன், என் அம்மா என்ன சொல்வார்கள், அவர்கள் பயங்கர கோபக்காரர் ஆயிற்றே என்று கூறி அழுதுள்ளார் Timothy.

Timothyயின் அம்மா என்ன சொன்னார் என்பது தெரியவில்லை, ஆனால், வழக்கு விசாரணை தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்