மானுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி: பொலிசார் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலுள்ள மான்கள் பூங்கா ஒன்றில் மானுடன் செல்பி எடுக்க முயன்ற பெண் ஒருவர் மானிடமே சரியாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

லண்டனிலுள்ள Richmond Park என்னும் மான்கள் பூங்காவிற்கு சென்ற இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராமில் போடுவதற்காக மான் ஒன்றிற்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

ஆனால், மானுக்கு அது பிடிக்கவில்லை போலும், தன் முன்னிரண்டு கால்களாலும் ஓங்கி அந்தப் பெண்ணின் பின் பக்கத்தில் ஒரு உதை விட்டுள்ளது அந்த மான்.

சரியாக இந்த காட்சியை யாரோ ஒருவர் புகைப்படம் எடுக்க, அந்த புகைப்படத்தை தங்கள் ட்விடர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பொலிசார், மான்கள் எல்லாம் சினிமாக்களில் காட்டப்படுவதுபோல் கியூட்டானவை அல்ல, ஆகவேதான் அவற்றை விட்டு 50 மீற்றர்களாவது விலகியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படி விலகியிருக்காவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு இந்த புகைப்படம்தான் சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் தன் படத்தைப் போட்டிருந்தால் கூட இவ்வளவு பிரபலம் ஆகியிருப்பாரோ என்னவோ தெரியவில்லை, அந்த பெண் இப்போது மானிடம் உதை வாங்கி பிரபலம் ஆகிவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்