பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பது கவலையளிக்கின்றது: ஐ.நா

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் பெரும் கவலையளிப்பதாக உலக சுகாதார மையத்தின் பிரித்தானிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தற்போது தெரிவித்துள்ளார்.

தொற்று பரல் வேகமெடுத்திருந்தாலும், தற்போதைய சூழல் கடந்த ஏப்ரலை விட மேம்பட்டதாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது, மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்த தொற்றால் நாளொன்றுக்கு 1,000 பேர் வீதம் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அனுபவித்த சூழ்நிலையில் பிரித்தானியா இல்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

"ஏப்ரல் மாத உச்சநிலையுடன் ஒப்பிடும்போது நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமான நோயாளிகளை நாங்கள் பதிவு செய்தாலும், நாங்கள் இன்னும் ஐந்து மடங்கு குறைவான இறப்புகளைக் கவனிக்கிறோம், மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் இரட்டிப்பாகும் நேரம் இன்னும் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம்" என்று க்ளூக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டால், ஜனவரி 2021 க்குள் இறப்பு அளவு ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்டதை விட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மாறாக, பரவலான முககவசம் பயன்பாடு மற்றும் சமூக இடைவெளிகளை கடுமையாக்குவது போன்ற "எளிய நடவடிக்கைகள்" பிப்ரவரி மாதத்திற்குள் 2,80,000 உயிர்களைக் காப்பாற்றக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்