தாயாரின் அந்த கொடுஞ்செயலை மன்னித்துவிட்டோம்: நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள் இருவர் உருக்கம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் நச்சு வாயுவால் சொந்த மகன்கள் இருவரை கொல்ல முயன்ற பெண்மணிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை மன்னித்துவிட்டதாக அந்த இளைஞர்கள் இருவரும் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியரான 51 வயது லிசா வால்ம்ஸ்லி என்பவர் 2019, ஜனவரி 1 ஆம் திகதி மனக் குழப்பத்தின் காரணமாக தமது மகன்களான லூயிஸ் மற்றும் காலம் ஆகிய இருவரையும் விஷ வாயுவை பயன்படுத்தி கொல்ல முயன்றார்.

இதில், தமது அறை முழுவதும் கார்பன் மோனாக்சைடு புகை சூழ்வதை கவனித்த லூயிஸ், துரிதமாக செயல்பட்டு தமது தாயாரின் உதவியை நாட விரைந்துள்ளார்.

அதேவேளை, தங்களது குடும்ப வாகனத்தில் இன்னொரு மகனுடன் புறப்பட்டு சென்றுள்ளார் லிசா வால்ம்ஸ்லி.

இதனிடையே, தகவல் அறிந்த பொலிசார் துரிதமாக செயல்பட்டு, லிசாவின் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், கார்பன் மோனாக்சைடு வாயு கசியும் வகையில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தாயாரின் கொடூர திட்டத்தால் நச்சு வாயுவால் கொல்லப்படவிருந்த இருவரும் காப்பாற்றப்பட்டனர்.

தனது மகன்களில் ஒருவரது உளவியல் பிரச்சனையால் கடும் அவதிக்கு உள்ளாகியிருந்த லிசா, மகன்கள் இருவருடனும் தாமும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தார்.

அன்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள தாயார் என தமது சுற்றத்தாரால் புகழப்பட்ட லிசா வால்ம்ஸ்லி,

ஒருகட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, 2005 ஆம் ஆண்டு அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டார்.

இதனிடையே, மூத்த மகனுக்கு உளவியல் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் இருப்பதை அறிந்த அவர் நொறுங்கிப் போயுள்ளார்.

2010-ல் கணவர் ஆண்ட்ரூ விவாகரத்து பெற்று வெளியேற, மகன்கள் இருவரையும் வளர்க்கும் பொறுப்பு வால்ம்ஸ்லி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையிலேயே, 21 மற்றும் 19 வயதுடைய தமது மகன்கள் இருவரையும் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார் வல்ம்ஸ்லி.

இந்த வழக்கை விசாரித்த மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு வெளியான நிலையில், லூயிஸ் மற்றும் காலம் இருவரும் தங்களை கொல்ல முயன்ற தாயாரை மன்னித்துவிட்டதாக உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்