லண்டனில் திருமண வரவேற்பில் திடீரென நுழைந்த பொலிசார்: தெரியவந்த காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றின்போது மண்டபத்திற்குள் நுழைந்த பொலிசார், அந்த நிகழ்ச்சியை உடனடியாக தடுத்து நிறுத்தினார்கள்.

செவ்வாயன்று மாலை, மேற்கு லண்டனிலுள்ள மண்டபம் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.

100க்கும் அதிகமான விருந்தினர்கள் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது தெரியவரவே, அங்கு வந்த பொலிசார் உடனடியாக அந்த நிகழ்ச்சியை நிறுத்தினார்கள்.

தற்போதைய விதிகளின்படி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 15 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே லண்டன் சனிக்கிழமை முதல் இரண்டாம் அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வர இருக்கும் நிலையில், இந்த விதிமீறல் நடந்துள்ளது.

கொரோனா பரவலிலிருந்து மக்களைக் காப்பாற்றத்தான் இந்த விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன, அப்படியிருக்கும் நிலையில், இது ஒரு ஆபத்தை உருவாக்கும் மற்றும் முட்டாள்தனமான விதிமீறலாகும் என்று கூறியுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர், கட்டிட உரிமையாளருக்கு 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்க இருப்பதாக தெரிவித்தார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் பொலிசார் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ள விருந்தினர்களை வெளியேற்றுவதைக் காணலாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்