ஒருவருக்கொருவர் தெரியாமலே 3 பெண்களுடன் ரகசிய வாழ்க்கை நடத்தி வந்த பிரித்தானியர்: இறுதியில் நடந்த விபரீதம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒருவருக்கொருவர் தெரியாமலே மூன்று பெண்களுடன் ரகசிய வாழ்க்கை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பிரித்தானியாவில், வீட்டை விட்டு வெளியேறிய பிள்ளைகள் வீட்டிற்க்குள் நுழைந்தபோது மாடிக்கு செல்லும் வழியை அடைத்தபடி ஒரு அட்டை இருப்பதைக் கண்டுள்ளனர்.

அதில், பிள்ளைகளே மேலே வராதீர்கள், பொலிசாரை கூப்பிடுங்கள், நீங்கள் இதைப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, என்னை மன்னியுங்கள், அம்மா ஆரோக்கியமாக இல்லை என்று எழுதியிருந்தது.

இதைப் பார்த்தவுடன் பதறியடித்து அட்டையைத் தூக்கிப்போட்டுவிட்டு அவர்கள் மாடிக்கு ஓடிய போது, அங்கே நிர்வாணமாக ஒரு ஆண் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவரது கழுத்து, மார்பு மற்றும் கைகளில் கத்திக்குத்துக் காயங்கள், அறையெல்லாம் ஒரே இரத்தமாக இருந்துள்ளது.

அதற்கு அருகிலேயே, அந்த பிள்ளைகளின் தாயான Jessena Sheridan (46)-ன் உயிரற்ற உடல், அவர் தன் கைகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதையும் கண்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணையில், இறந்து கிடந்த அந்த ஆணின் பெயர் Gary Williams (58) என்பதும், அவர் பிரித்தானியாவில் இருக்கும் வேல்ஸைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கும் Jessenaவுக்கும் தவறான உறவு இருப்பதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், தொழிலதிபரான Gary-க்கு ஏற்கனவே Elaine என்ற பெண்ணுடன் திருமணமாகி, பிள்ளைகள் மட்டுமல்ல, பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர் 1991ஆம் ஆண்டு இன்னொரு பெண்ணுடன் ரகசியமாக வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு Jessenaவை சந்தித்த Gary, அவருடனும் வாழத்தொடங்கியுள்ளார்.

அவர் இப்படி மூன்று பேருடன் வாழ்க்கை நடத்துவது அந்த மூன்று பெண்களுக்குமே தெரியாமல் இருந்துள்ளது.

Gary அவ்வளவு ரகசியமாக, திட்டமிட்டு ஒருவருக்கொருவர் தெரியாமல் மூவருடனும் வாழ்ந்துவந்தார் என்ற உண்மை வெளி உலகுக்கு தெரியவரும் நேரத்தில், அவர் உயிருடன் இல்லை.

ஆனால், திடீரென Garyயை கொலை செய்யும் அளவுக்கு Jessenaவுக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை என்பது மட்டும் கடைசி வரை தெரியாமலே போய்விட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்