லிவர்பூல் மேயர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம்: காவு வாங்கிய கொரோனா

Report Print Basu in பிரித்தானியா

லிவர்பூல் மேயரின் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது சகோதரர் இறந்துவிட்டதாக லிவர்பூல் மேயர் ஜோ ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை, தனது மூத்த சகோதரர் மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை வெளிப்படுத்திய ஆண்டர்சன், வைரஸ் பரவாமல் தடுக்க உள்ளூர் விதிகளை பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தினார்.

அனைத்து ஊழியர்கள் கடுமையாக முயற்சி செய்த போதிலும், என் சகோதரர் நேற்று இரவு 10.45 மணிக்கு இறந்துவிட்டார் என சனிக்கிழமையன்று ஆண்டர்சன் ட்விட்டர் பதிவில் கூறினார்.

எங்களுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என குறிப்பிட்டார்.

இத்தருணத்தில் அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி. ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவளித்து இந்த போரில் வெற்றி பெறுவோம் என லிவர்பூல் மேயர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்