லண்டனில் நடக்கும் முக்கிய நிகழ்வில் இளவரசர் ஹரிக்கு அனுமதியில்லை: தெரியவந்த காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனின் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் Remembrance Sunday service என்ற முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ள இளவரசர் ஹரிக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ குடும்ப உறுப்பினர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக மலர் வளையங்களை வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற உள்ளது.

அதில், இளவரசர்கள் சார்லஸ், வில்லியம் மற்றும் இளவரசி ஆன் ஆகியோர் மலர் வளையங்களை வைக்க, மகாராணியார், இளவரசிகள் கேட் மற்றும் கமீலா ஆகியோர் வெளியுறவு அலுவலக பால்கனியில் இருந்தவண்ணம் அதை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இளவரசர் ஹரி பணியிலிருக்கும் ராஜ குடும்ப உறுப்பினர் இல்லை என்பதால், அவர் தன் குடும்பத்துடன் இணைந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், இந்த முக்கிய நிகழ்வின் நூற்றாண்டு விழா இப்போது அநுசரிக்கப்படும் நிலையிலும், கொரோனா பிரச்சினை இருப்பதையடுத்து முதன்முறையாக பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்