பிரித்தானியாவில் முதன்முறையாக... 3 கொலை செய்த நபர் தண்டனையில் இருந்து விடுவிப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் தற்காப்புக்காக மூன்று கொலை செய்த நபரை, வரலாற்றில் முதன்முறையாக தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லண்டனில், நால்வர் சூழ்ந்து கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முற்பட்டபோது, தற்காப்புக்காக, அதில் மூவரை தற்போது 30 வயதாகும் குர்ஜீத் சிங் என்பவர் கொலை செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட குர்ஜீத் சிங் மீது, பொதுவெளியில் கத்தியை காட்டி மிரட்டியதாக மட்டுமே வழக்குப்பதியப்பட்டது.

கடந்த ஆகஸ்டு மாதம் ஸ்னாரெஸ்ப்ரூக் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் குற்றவாளி அல்ல என்பது நிரூபணமானது.

ஜனவரி 19 அன்று இல்ஃபோர்டுக்கு அருகிலுள்ள செவன் கிங்ஸ் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில், நால்வர் கும்பலிடம் இருந்து குர்ஜீத் சிங் உயிர் தப்ப போராடியதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டது.

வெறும் 13 நொடிகளில் கத்தி ஒன்றால் தாக்கி, பால்ஜித் சிங்(34), நரிந்தர் சிங்(26) மற்றும் ஹரிந்தர் குமார்(22) ஆகியோருக்கு உயிர் அபாயம் ஏற்படுத்தியதாக குர்ஜீத் சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தொழில் போட்டி, பண விவகாரம் உள்ளிட்ட காரணங்களாலையே, குர்ஜீத் சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

இதில், தலையில் கத்தியால் வெட்டிய காயமும், சுத்தியலால் தாக்கப்பட்ட காயமும் இருந்ததை குர்ஜீத் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

குர்ஜீத் சிங் மீது தாக்குதல் தொடுத்த நால்வரில் ஒருவரான சந்தீப் சிங் என்பவருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் சந்தீப் சிங் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்