பிரித்தானியாவில் என்.எச்.எஸ்-யின் சோதனை மற்றும் தடமறிதல் தரவுகளை அணுகுவதற்கான அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாராவது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மீறுவதாக பொலிசார் சந்தேகித்தால், சபைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு காத்திருப்பதை விட அதிகாரிகள் நேரடியாக தரவுகளை அணுக முடியும்.
ஆனால் இந்த நடவடிக்கை குறித்து ஏற்கனவே சில முன்னணி விஞ்ஞானிகள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த மாற்றம் மக்கள் சோதனை மற்றும் தடமறிதல் பயன்படுத்துவதை பாதிக்கும் மற்றும் இந்த அமைப்பில் ரகசியத்தன்மை குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தலையீட்டதை அடுத்து இந்த நடவடிக்கை வந்ததாக மூத்த வட்டாரம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கையால் மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தயங்குவார்கள் என தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியர் கிறிஸ் விட்டியின் அலுவலகம் அஞ்சுகிறது.