புத்தாண்டு துவக்கத்திற்குள் கொரோனா தடுப்பூசி! பிரித்தானிய அதிகாரி சொன்ன முக்கிய தகவல்

Report Print Karthi in பிரித்தானியா
452Shares

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி 2021 புத்தாண்டு துவக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான ஜொனாதன் வான்-டாம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் அஸ்ட்ராஜெனெகாவால் தயாரிக்கப்படும் தடுப்பூசி கிறிஸ்மஸுக்குப் பிறகு விரைவில் தயாரிக்கப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் (எம்.பி.க்கள்) கூறியுள்ளார்.

"அனைத்து தடுப்பூசிகளும் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் கட்டுப்பாட்டாளரால் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக மதிப்பிடப்பட வேண்டும். இன்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடவடிக்கைகள் அணுகலை மேம்படுத்துவதோடு நோயாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய பாதுகாப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன" என்று அவர் கூறியதாக ஐரோப்பாவை தளமாக கொண்ட செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது பிரித்தானியாவில் 7 லட்சத்திற்கும் அதிகமானவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கையானது 6 லட்சத்திற்கும் அதிகமானதாக உள்ளது. இதுவரை 43.5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்