லொறி ஓட்டும்போது மயங்கிய சாரதி: அதன் பின் நடந்த திக் திக் நிமிடங்கள்: வெளியான வீடியோ காட்சி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இராட்சத லொறி ஒன்றின் சாரதி ஒருவர் மயக்கமடைந்ததால், லொறி அவரது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

லொறி ஓட்டும்போது எதையோ உண்ட அந்த சாரதி, உணவுப்பொருள் ஏதோ அவரது மூச்சுக்குழாய்க்குள் சென்றதையடுத்து மயக்கமடைந்துள்ளார்.

இதனால் லொறி கட்டுப்பாட்டை இழந்து இங்கிலாந்தின், Duxfordஇல் அமைந்துள்ள சாலையில் தவறான பக்கத்தை நோக்கி வந்துள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில், லொறி தவறான பக்கத்துக்கு வர, எதிரே வந்த கார் மீது அது மோதியதில், கார் சென்று அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்திற்குள் தள்ளப்படுவதைக் காணலாம்.

ஆனால், நல்ல வேளையாக பெரும் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, டேஷ்கேம் பொருத்தியிருந்த காரை நோக்கி அந்த லொறி வருவதைக் கண்ட காரின் சாரதி பதற, மயிரிழையில் தப்பியுள்ளது அவரது கார். பின்னர், அந்த லொறி மரங்கள் மீது மோதி நின்றதாக தெரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்