3 அடுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இப்பிராந்தியத்தில் இதை மீண்டும் திறக்கலாம்: பிரித்தானியா அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா

3 அடுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள Merseyside கவுண்டியில் ஜிம்களை மீண்டும் திறக்க பிரித்தானியா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்புதான் Merseyside கவுண்டியில் உயர்மட்ட கடுமையான 3 அடுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் 3 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள மற்ற பகுதிகளான லங்காஷயர் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டரில் ஜிம்கள் திறந்திருக்க அனுமதி வழங்கிய அரசாங்கம், Merseyside-ல் மட்டும் மூட உத்தரவிட்டது.

Merseyside-ல் உள்ள ஜிம்கள் மற்றும் ஓய்வு நேர மையங்களை மூட உத்தரவிட்திற்காக லிவர்பூல் மேயர் பிரித்தானியா அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் நேற்றிரவு வரை பிரித்தானியா அமைச்சர்கள் மற்றும் Merseyside கவுண்டியில் உள்ள நகர பிராந்திய தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடந்தன.

பேச்சுவார்த்தையின் போது லங்காஷயரில் உள்ள ஜிம்கள் திறந்திருக்கும் போது, Merseyside கவுண்டியில் ஏன் மூட உத்தரவிட்டது என்பதற்கான அறிவியல் ஆதாரங்களை காட்டுமாறு பிரித்தானியா அமைச்சர்களிடம் லிவர்பூல் மேயர் கேட்டுள்ளார்.

ஆதாரங்களை இங்கிலாந்து அரசு வழங்கத் தவறியதை அடுத்து Merseyside-ல் ஜிம்ஸ்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஜிம்கள் திறக்கப்படும் என லிவர்பூல் நகர Steve Rotheram அறிவித்தார். மேலும் 3 அடுக்கு ஊரங்கு கட்டுப்பாடுகளை தரப்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என Steve Rotheram தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்