என் குழந்தை ஊர்ந்துவந்து தாய்ப்பால் அருந்தினாள்: கொல்லப்பட்ட குழந்தை வழக்கில் தாயின் கூற்றுக்கு மருத்துவர் மறுப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா
822Shares

காதலனால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதால் தன் குழந்தை இறந்த சம்பவத்தில், வேகமாக ஊர்ந்துவந்த தன் குழந்தை தன்னிடம் தாய்ப்பால் அருந்தியதாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார் ஒரு இளம்பெண்.

பிரித்தானியாவிலுள்ள Radcliffe என்ற இடத்தில் வாழ்ந்து வந்த Chelsea Crilly (20)இன் மகளான Orianna என்ற 12 மாதக் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மறுநாள் உயிரிழந்துவிட்டாள்.

இந்த வழக்கில் சாட்சியமளித்தபோது, Oriannaக்கு எதிர்பாராதவிதமாக அடிபட்டு விட்டதாகவும், இருந்தாலும் அவள் தன்னிடம் ஊர்ந்துவந்து தன்னிடம் தாய்ப்பால் அருந்தியதாகவும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார் Chelsea.

ஆனால், குழந்தைக்கு சிகிச்சையளித்த Dr Sarah Dixon, குழந்தை கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாகவும், மண்டையோட்டில் எலும்பு முறிவும், மூளைக்கும் மண்டயோட்டுக்கும் நடுவில் இரத்தக்கசிவு இருந்ததாகவும், மூளையிலும் காயம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

குழந்தையை வேகமாக தூக்கி ஆட்டியதோடு, அதன் தலையில் ஓங்கி ஓங்கி யாரோ அடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தையின் கழுத்துப்பகுதியிலுள்ள முதுகெலும்பு, மற்றும் இரண்டு விலா எலும்புகளும் முறிந்திருக்கின்றன.

அப்படியிருக்கும் நிலையில், குழந்தையால் நிச்சயம் ஊர்ந்து வந்திருக்கவும் முடியாது, பால் குடித்திருக்கவும் முடியாது என Dr Sarah தெளிவாக கூறியுள்ளார்.

குழந்தை நகரும்போது உடைந்திருந்த விலா எலும்புகள் கடுமையாக வலித்திருக்கும், அதனால் குழந்தையால் ஊர்ந்திருக்க முடியாது, அதன் குழந்தையின் கழுத்து எலும்பு முறிந்திருந்ததால், அதனால் பாலை உறிஞ்சி குடித்திருக்கவும் முடியாது என்றார் அவர்.

இதற்கிடையில், விசாரணையில், Chelseaவும் அவரது காதலர் Jamie Chadwick (22)ம் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அன்று கஞ்சா, கொக்கைன், வோட்கா என பல போதைப்பொருட்களை கலந்து அருந்தியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.

Jamie, ஏற்கனவே குழந்தைகளை தக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவன், அவனுடன் குழந்தையை விடுவது ஆபத்து என்று தெரிந்தும் Chelsea குழந்தையை அவனிடம் விட்டிருக்கிறார்.

ஆகவே, நடந்தது விபத்து அல்ல, Jamie குழந்தையை வேண்டுமென்றே அடித்திருக்கிறான் என்று கூறிய சட்டத்தரணி, குழந்தையை Jamie காயப்படுத்தும் நோக்கில்தான் அடித்துள்ளான் என்றும் கூறியுள்ளார்.

அவனைக் காப்பாற்றத்தான் Chelsea இப்படி பொய் சொல்லியிருக்கிறார். Jamie தற்போது காவலிலிருக்கிறான், Chelsea ஜாமீனில் இருக்கிறார். வழக்கு தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்