ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதிய தடை விதித்த பிரித்தானியா! அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
4746Shares

ஐரோப்பிய ஒன்றிய குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என பிரித்தானியா அரசாங்கம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

ஜனவரி முதல் இந்த புதிய விதிகளை அறிமுகப்படுத்தப்போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஐனவரி முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருபவர்கள் உலகின் பிற பகுதிகளை சேர்ந்தவர்களை போலவே கருதப்படுவார்கள் என பிரித்தானியா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக பிரித்தானியாவின் காலம் முடிவடையும் 2021 ஜனவரி 1ம் திகதி முதல் இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றிய விதிகளால், எங்களது மதிப்புகளை துஷ்பிரயோகம் செய்யும் மற்றும் வாழ்க்கை முறையை அச்சுறுத்தும் ஆபத்தான வெளிநாட்டு குற்றவாளிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கட்டாயப்படுத்தியுள்ளன என்று பிரித்தானியா உள்துறை அமைச்சர் பிரிதி படேல் கூறினார்.

பிரித்தானியா இப்போது பாதுகாப்பாக இருக்கும். தேசியத்தைப் பொருட்படுத்தாமல் வெளிநாட்டு குற்றவாளிகள் ஒரே மாதிரியான குற்றவியல் விதிக்கு உட்படுத்தப்படுத்தும் பிரித்தானியாவின் உறுதியான மற்றும் சிறந்த எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு நன்றி என்று பிரித்தானியா உள்துறை அமைச்சர் பிரிதி படேல் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்