பிரித்தானியாவில் கணவன் செய்த மோசமான செயலை வீடியோ எடுத்து பலருக்கும் பகிர்ந்த மனைவி! நீதிமன்றம் அளித்துள்ள தண்டனை

Report Print Raju Raju in பிரித்தானியா
4232Shares

பிரித்தானியாவில் நபர் ஒருவர் கோழியை பலாத்காரம் செய்ததோடு அதை அவர் மனைவி வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தம்பதிக்கான தண்டனை விபரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் ரெஹான் பேக் (37). இவரது மனைவி ஹலீமா பேக் (38).

இந்த தம்பதிக்கு தான் பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கு என்னவென்றால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் விலே ரெஹான் பேக், தனது வீட்டின் அடித்தளத்தில் தான் வளர்த்து வந்த கோழியை பலாத்காரம் செய்தார்.

அதனை, அவரது மனைவி ஹலீமா பேக் கமெராவை பயன்படுத்தி வீடியோவில் பதிவு செய்தார். சில நாட்கள் கழிந்து அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் உடனடியாக அந்த வீடியோவை முடக்கியதுடன், தம்பதிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் தீர்ப்பு பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட நபரின் மனைவி அவருடன் சேர்ந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ரெஹான் கோழிகளுடன் பாலியல் உறவு கொண்டபோது, தன் மனைவியின் அருகில் அடிக்கடி வந்து சென்றுள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இரு கோழிகளும், அடுத்த சில மணி நேரங்களில் இறந்தன.

குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை இழிவானது. மிகவும் வக்கிரமானது. இவர்களது நடவடிக்கைகள் சமூகத்தின் எந்தவொரு சாதாரண மனிதரையும் காயப்படுத்தும்.

மேலும், ஹலீமா பேக் தனது கணவரின் கொடூரமான செயலுக்கு உதவியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால், இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்