பிரித்தானியா உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசியால் தான் தன்னார்வலர் மரணமடைந்தாரா? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் விளக்கம்

Report Print Basu in பிரித்தானியா
206Shares

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல்கலைக்கழகம் விளக்கமளித்தள்ளது.

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா நோய்த்தடுப்பு பரிசோதனையை AstraZeneca-வுடன் இணநை்து உருவாக்கி வருகிறது.

பிரேசில், பிரத்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள தன்னார்வலர்களிடம் இந்த தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரேசிலில் பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தன்னார்வலர் மரணத்திற்கும் தடுப்பூசி பரிசோதனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை பிரேசிலில் தொடரும் என்று கூறியது.

தன்னார்வலர் மரணம் குறித்து விசாரித்ததாக பல்கலைக்கழகம் கூறியது, ஆனால் தடுப்பூசி பாதுகாப்பு குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

தடுப்பூசி சோதனைியல் பங்கேற்கும் நபர்கள் கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்தாலும் அல்லது கொரோனா தடுப்பூசி குழுவில் இருந்தாலும் சரி, அனைத்து குறிப்பிடத்தக்க மருத்துவ சம்பவங்களும் சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

பிரேசிலில் இந்த வழக்கை கவனமாக மதிப்பீடு செய்ததைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து எந்த பிரச்சினையும் இல்லை.

தடுப்பூசி சோதனை தொடர வேண்டும் என்று பிரேசிலிய கட்டுப்பாட்டாளருக்கு கூடுதலாக சுயாதீன மதிப்பாய்வு பரிந்துரைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்