பிரித்தானியாவில் இரண்டாவது அடுக்கு ஊரடங்கால் பாதிக்கப்படும் விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிதியுதவி: இன்று அறிவிக்கிறார் சேன்ஸலர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
696Shares

பிரித்தனியாவில், இரண்டாவது அடுக்கு ஊரடங்கால் பெருமளவு பாதிக்கப்பட இருக்கும் ஆயிரக்கணக்கான மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு மற்றொரு பெரும் நிதியுதவியை இன்று அறிவிக்க இருக்கிறார் பிரித்தானிய சேன்ஸலர்.

இன்று காலை வெளியான ஒரு அறிவிப்பின்படி, விருந்தோம்பல் துறைக்கும் சொந்த தொழில் செய்வோருக்கும் ஆதரவளிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் நிதியுதவியை அறிவிக்க இருக்கிறார் சேன்ஸலர் ரிஷி சுனக்..

மிகக்கடுமையான மூன்றாவது அடுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மூடப்படும் கட்டாயத்திற்குள்ளாகியுள்ள தொழில்களுக்கு போதுமான அலவு நிதியுதவி கிடைக்கும் நிலையில், அதற்கு அடுத்த அடுக்கான இரண்டாவது அடுக்கில் உள்ள லண்டன் மற்றும் எசெக்ஸ் போன்ற இடங்களுக்கு குறைவான உதவியே கிடைக்கிறது.

ஆகவேதான், இரண்டாவது அடுக்கு ஊரடங்கு பகுதியில் பாதிக்கப்படும் விருந்தோம்பல் துறைக்கும் சொந்த தொழில் செய்வோருக்கும் உதவுவதற்காக இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், புதிதாக எவ்வித உதவி கிடைக்கப்போகிறது என்பது குறித்த முழு விவரங்கள் இப்போதைக்கு கிடைக்கவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்