பிரித்தானியாவில் ஆணவக்கொலையா? மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்: 3 சகோதரர்கள் மீது கொலை வழக்கு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
5042Shares

பிரித்தானியாவில் புறநகர் சாலைக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட சடலம் மார்ச் மாதம் காணாமல் போன பெண் ஒருவரது என்பதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ப்ரோம்ஸ்கிரோவ், வொர்செஸ்டர்ஷைர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் 28 வயதான சொபைதா சாலங்கி என்பவரது மூன்று சகோதரர்கள் மீது தற்போது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 29 அன்று, ஜோகிங் செல்வதாக குடும்பத்து உறுப்பினர்களிடம் கூறிவிட்டு சென்ற சொபைதா சாலங்கி அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை.

சொபைதா மாயமான விவகாரம் பின்னர் கொலை வழக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே, மேற்கு மெர்சியா பொலிசார், கடந்த 16 ஆம் திகதி சடலம் ஒன்றை கண்டெடுத்ததுடன், அது மாயமான சொபைதா சாலங்கி என்பவரது என உறுதி செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் குழு சொபைதா தொடர்பில் அயராது தேடி வந்துள்ளதாகவும், தற்போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது உண்மையில் சோகமான நிகழ்வு எனவும்,

இந்த விவகாரம் தொடர்பில் தற்போதைய நிலை அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆறுதல்களைக் கொடுக்கும் என்று நம்புகிறோம் என மேற்கு மெர்சியா பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் தற்போது சொபைதாவின் சகோதரர்கள், 42 வயது நெஜாம் சாலங்கி, 32 வயதான முகமது யாசின் சாலங்கி மற்றும் 29 வயது முகமது ராமின் சாலங்கி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் வொர்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 16 அன்று விசாரணையை எதிர்கொள்ள இருக்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்