கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எப்போது கிடைக்கும்? பிரித்தானிய விஞ்ஞானி வெளியிட்ட தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
207Shares

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பு கிடைக்கக்கூடும் என்று அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் ஊடகத்தினரை சந்தித்த தலைமை விஞ்ஞானி சர் பேட்ரிக் வாலன்ஸ்,

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் கொரோனா தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தம்மால் தற்போது ஊகிக்க முடியாது என்றும்,

தடுப்பூசி தொடர்பில் தற்போதைய நமது நிலை குறிப்பிடத்தக்கது எனவும் சர் பேட்ரிக் வாலன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மிக விரைவில் தடுப்பூசி கிடைப்பதால், பிரித்தானியா கண்டிப்பாக மாற்றத்தை கண்டறியும் என தாம் நம்புவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி தொடர்பில் சர் பேட்ரிக் வாலன்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பது தமக்கு அது ஊக்கமளிப்பதாகவும் பிரதமர் ஜான்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பிரச்சனைகளில் இருந்து நாட்டை தடுப்பூசி காப்பாற்றி விடாது எனவும்,

ஆனால் அரசு கடினமாக உழைத்து வருவதாகவும், மீள்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு வெவ்வேறு குழுக்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என சர் பேட்ரிக் வாலன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு கிடைக்கும் என்றாலும்,

பரவலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு காலதாமதமாகும் எனவும், அது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு நம்மிடம் குறைவான எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு இருக்கும் எனவும்,

ஆனால் அதன் சாதக பாதகங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் வரை எவ்வித உத்தரவாதவும் தர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மாஸ்க் பயன்படுத்த வேண்டும் எனவும் கைகளின் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சர் பேட்ரிக் வாலன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்