லண்டனில் நடந்த சம்பவம்! இளம்பெண் மீது சபலப்பட்ட நபருக்கு நேர்ந்த கதி: நடைபாதையில் சிதறிக்கிடந்த பொருள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
680Shares

மேற்கு லண்டனில், முன்னாள் காதலி தன்னை சந்திக்க வருமாறு அழைத்ததால் சபலப்பட்ட ஒரு நபரின் மூளை நடைபாதையில் சிதறிக்கிடப்பதைக் கண்டு பொலிசார் ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

உல்லாசமாக இருக்கலாம் வாருங்கள் என Paul Flory (33)இன் முன்னாள் காதலி Crystal Culhane (22) அழைக்கவே, சபலப்பட்ட Paul அவரைத்தேடிச் சென்றுள்ளார்.

ஆனால், Crystal குறிப்பிட்ட இடத்துக்கு Paul செல்லும்போது, அங்கே James White (22) என்பவர் மறைந்திருந்தது அவருக்குத் தெரியாது.

James, Crystalஇன் இந்நாள் காதலர்... Crystalஐக் காணாமல் Paul அவரை தன் மொபைலில் அழைக்க முயலும்போது, திடீரென பேஸ்பால் மட்டையால் அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார் James. அடி பலமாக விழுந்ததால் நிலை குலைந்த Paulக்கு தன்னை அடித்தவர் யார் என்பது கூட தெரியவில்லை.

சாலையோரம் விழுந்துகிடந்த Paulஐ வழிப்போக்கர்கள் கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

சம்பவ இடத்துக்கு Dean Williams என்ற பொலிசார் வந்து பார்க்கும்போது, அவரது கண்ணில் அந்த பொருள் பட்டிருக்கிறது. அது Paulஇன் மூளையின் ஒரு துண்டு. அந்த அளவுக்கு கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் Paul. என்றாலும், அவர் உயிர் பிழைத்துக்கொண்டார்.

விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், Jamesஉடன் சிறிது காலம் நெருக்கமாக பழகிய Jamie Hattam (33) என்ற பெண், சம்பவ இடத்தில் தான் Jamesஐப் பார்த்தை கண்ணீருடன் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Crystalஇன் முன்னாள் காதலரான Paul, தன் காதலியை தாக்கியதற்காக சிறையிலிருந்துவிட்டு சிறிது காலத்திற்கு முன்னால்தான் வெளியே வந்திருந்தார்.

அவர் சிறையிலிருந்தபோது புதிதாக James மீது காதலில் விழுந்த Crystal, திட்டமிட்டு, அவருடன் சேர்ந்து Paulஐக் கொல்ல முயன்றுள்ளார்.

Crystal மற்றும் James இருவர் மீதும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணை தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்