காதலியின் குழந்தையை அடித்துக்கொன்றதாக வெளியான செய்தி: பரபரப்பு உண்மையை வெளியிட்டார் காதலன்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
146Shares

தன் காதலியின் குழந்தையை அடித்துக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர் ஒருவர், தன் காதலிக்காக தான் பழி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள Radcliffe என்ற இடத்தில் வாழ்ந்து வந்த Chelsea Crilly (20)இன் மகளான Orianna என்ற 12 மாதக் குழந்தை, படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மறுநாள் உயிரிழந்துவிட்டாள்.

குழந்தைக்கு சிகிச்சையளித்த Dr Sarah Dixon, குழந்தை கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாகவும், மண்டையோட்டில் எலும்பு முறிவும், மூளைக்கும் மண்டயோட்டுக்கும் நடுவில் இரத்தக்கசிவு இருந்ததாகவும், மூளையிலும் காயம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

முதலில், குழந்தை படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறிய Chelsea, பின்னர் தன் காதலன் Jamie Chadwick (22) குழந்தையை தாக்கியதாக அவர் மீது பழியைத்தூக்கிப்போட்டார்.

Jamie மீது ஏற்கனவே மற்றொரு குழந்தையை தாக்கியதாக புகார் இருந்ததால் Chelseaவுக்கு வசதியாகப் போய்விட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த Jamie, நான் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நின்றபோதே இந்த உண்மையை நான் கூறியிருக்கலாம். ஆனால், நான் Chelseaவை அதிகமாக நேசிக்கிறேன், அவள் கஷ்டப்படக்கூடாது என்றுதான் இந்த உண்மையை நான் கூறவில்லை. நாங்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டதும் உண்மை, மது அருந்தியதும் உண்மை, ஆனால், Chelseaதான் அதிகமாக குடித்திருந்தாள்.

நான் மறுநாள் காலையில் எழுந்துவரும்போது, குழந்தை Orianna இரவெல்லாம் அழுததுபோல், அவளது கண்கள் சிவந்திருந்தது. அவள் அழுவதைக் கேட்டு, வாயை மூடு என Chelsea கத்தியதை நான் கேட்டேன். சோபாவிலிருந்த குழந்தையை Chelsea தூக்கி தரையில் அடித்தாள்.

அவள் குழந்தையை காலால் ஓங்கி உதைக்க, குழந்தை பறந்துபோய் எதிலோ மோதியது. என்ன செய்கிறாய் என நான் Chelseaவிடம் கத்த, அவள், நான் குழந்தையை காயப்படுத்திவிட்டேன் என்றாள், இதுதான் உண்மையில் நடந்தது என்கிறார் Jamie.

இந்த வழக்கில் இன்னொரு முக்கிய விடயம், Orianna, Jamieக்கு பிறந்த குழந்தை அல்ல, அவள் Chelseaவின் குழந்தை. ஏற்கனவே குழந்தையுடன் இருந்த Chelseaவுடன்தான் வாழ்ந்துவந்தார் Jamie.

தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவருமே குற்றத்தை மறுத்து அடுத்தவர் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில், அடுத்து நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்