பிரித்தானிய கொரோனா தடுப்பூசி குறித்து வெளியாகியுள்ள நம்பிக்கையளிக்கும் தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
472Shares

பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி முழுமையாக வேலை செய்வதாகவும், வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகவும் ஆய்வு முடிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பொதுவாக, தடுப்பூசிகள் ஒரு செயலிழக்கச்செய்யப்பட்ட வைரஸ் அல்லது வைரஸின் துகளை பயன்படுத்தி உருவாக்கப்படும்.

ஆனால் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில், உயிருள்ள கொரோனா வைரஸின் ஒரு பாகமே உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், இந்த தடுப்பூசி கொரோனா புரதத்துக்கு தகவல்கள் அளிக்க, அதற்கேற்ப பெருமளவில் உடல் கொரோனா புரதத்தை உற்பத்தி செய்வது தெரியவந்துள்ளது.

இதன் பொருள் என்னவென்றால், தடுப்பூசிபோடப்பட்டவரின் உடலுக்குள் அந்த கொரோனா புரதம் பெருகத்தொடங்கியதும், அதற்கேற்ப அவரது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த நோயை அடையாளம் கண்டுகொண்டு நோயை எதிர்த்துப் போராடத் துவங்குகிறது, அதே நேரத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு விடாமலும் அது தடுக்கிறது.

பிரிஸ்டல், செல் மற்றும் மூலக்கூறு ஆய்வகத்தைச் சேர்ந்த Dr David Matthews கூறும்போது, இதுவரை இந்த ஆய்வில் தெளிவு கிடைக்காமல் இருந்தது, இப்போது நாங்கள் எதிர்பார்த்த அனைத்தையும் இந்த தடுப்பூசி செய்கிறது, அத்துடன் எங்கள் ஆய்வு நல்ல செய்திகளை மட்டுமே கொடுத்துள்ளது என்றார்.

உலகமே ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சரியாக வேலை செய்கிறதா என்பதற்கான முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த முடிவுகள் ஆய்வில் ஒரு படி முன்னோக்கி சென்றுள்ளது நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்