பிரித்தானியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! அடுத்தடுத்து முழு ஊரடங்கை அமல்படுத்தும் முக்கிய நகரங்கள்

Report Print Karthi in பிரித்தானியா
562Shares

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தற்போது பெருமளவில் தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் நிலையில், கிரேட்டர் மான்செஸ்டரின் 2.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட லிவர்பூல் நகர மண்டலம் மற்றும் லங்காஷயரில் ஆகிய நகரங்கள் கடும் ஊரடங்கிற்கு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்னதாக வேல்ஸ்ஸில் 17 நாட்கள் கடும் ஊரடங்கு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென் யார்க்ஷயரும் சனிக்கிழமை முதல் மூன்றடுக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டில் வரும். இந்த பகுதிகளில் மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை மூடப்படும்.

இதைத் தொடர்ந்து அடுக்கு மூன்று கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக நாட்டிங்ஹாம் மற்றும் வாரிங்டனில் உள்ள அரசாங்கத்திற்கும் உள்ளூர் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளன.

இந்த பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் துணி போன்ற பொருட்களை விற்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வருட தொடக்கத்தில் கொரோனா தொற்று பல பாதிப்புகளை ஐரோப்பா முழுவதும் ஏற்படுத்தியிருந்தது.

தற்போது பிரித்தானியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 8,13,451 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 44 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்