பிரித்தானியாவில் 15 நிமிடங்களில் கொரோனா முடிவுகள்! விரைவில் அறிமுகம்: எவ்வளவு பவுண்டு தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
638Shares

வெறும் பதினைந்தே நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் பரிசோதனை ஒன்று பிரித்தானியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பயன்பாட்டுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படும் அந்த பரிசோதனைக்கான கட்டணம் வெறும் 5 பவுண்டுகள்தான் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த சோதனை பயன்பாட்டுக்கு வந்தால், கால்பந்து மைதானத்துக்கோ, ஒரு மதுபான விடுதி அல்லது தியேட்டருக்கோ செல்பவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவரும் பட்சத்தில் தைரியமாக செல்லும் சூழல் உருவாகலாம் என அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் மீது இந்த பரிசோதனை சோதனை செய்யப்படும் நிலையில், அது மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், கொரோனாவின் இரண்டாவது அலையின்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்க அது பெருமளவில் உதவியாக இருக்கும்.

dailymail

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்