நூற்றுக்கணக்கான சிறுமிகளின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த லண்டன் இளைஞன்! நீதிமன்றம் அளித்த தண்டனை

Report Print Raju Raju in பிரித்தானியா
424Shares

லண்டனை சேர்ந்த 28 வயது இளைஞன் செல்போனில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகளின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த குற்றத்துக்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்தவர் Brian Wood (28). இவர் தனது செல்போனில் நூற்றுக்கணக்கான சிறார்களின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்தார்.

இது தொடர்பான தகவலின் பேரில் பொலிசார் அவர் வீட்டில் சோதனை செய்த போது அவர் செல்போனை கைப்பற்றினார்கள்.

இதில் பல புகைப்படங்களை அவரே எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் Brian Wood-ஐ கடந்தாண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கைது செய்தனர்.

புகைப்படங்களில் இருந்த சிறார்கள் அனைவரும் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட Brian மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர் குற்றவாளி என சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் Brianக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி மார்க் பீக்காக் கூறுகையில், Brian உண்மையில் சிறார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவராக இருந்திருக்கிறார்.

விசாரணையின் போது கூட ஆம் சிறார்களை வேட்டையாடுபவன் நான் என துணிச்சலாக அவர் ஒப்பு கொண்டார், சிறு குழந்தைகளை சுரண்டிய மற்றும் துஷ்பிரயோகம் செய்தவர்களை அம்பலப்படுத்த விரும்பினார் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்