பிரித்தானியாவின் இங்கிலாந்தில் விதிமுறையை மீறிய நபருக்கு விதிக்கப்பட்ட பெரும் அபராதம்! எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
650Shares

பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிரித்தானியாவில் பல்வேறு இடங்களி உட்புறக் கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தின் Manchester-ன் Angel Meadows பகுதியின் Simpson வீதியில், இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், பெரிய ஸ்பீக்கர், டி.ஜே என சுமார் 50 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்துள்ளது.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, குறித்த பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், நிகழ்ச்சி அமைப்பாளருக்கு 10,000 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர்,

இந்த சம்பவம் குறித்து மான்செஸ்டர் உதவி தலைமை கான்ஸ்டபிள் மாப்ஸ் உசேன் கூறுகையில், உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியில் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது,

பெரிய கூட்டங்களில் சட்டத்தை மீறியதற்காக அதிகபட்ச தண்டனையை வழங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, இது விதிகளை மீறுவதாகக் கருதுபவர்களுக்கு இது ஒரு நினைவூட்டலாக அமையும் என்று நம்புகிறேன். இது போன்ற விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்