லண்டன் தேம்ஸ் நதி போல் இந்த நதி மாறும்! தூய்மைப்படுத்தப்படும்: அமைச்சர் திட்டவட்டம்

Report Print Santhan in பிரித்தானியா
187Shares

தமிழகத்தில் இருக்கும் வைகை நதி லண்டன் தேம்ஸ் நதி போல் மாறும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர்களில் சற்று வித்தியாசமானவர் செல்லூர் ராஜூ என்று கூறலாம். ஏனெனில், ஊடகங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் கில்லாடியாக திகழும் இவர் அவ்வப்போது தமது பேட்டிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறி வம்பில் மாட்டிக்கொள்வார்.

மதுரையை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை போல் மாற்றிக்காட்டுவேன் என ஏற்கனவே பேசியிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இப்போது வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போல் மாற்றப்படும் எனக் கூறியிருக்கிறார்.

வைகை நதியில் மாசுகள் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தேம்ஸ் நதியை போல் தூய்மைப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், திமுக கதை வரும் 2021-ஆம் ஆண்டோடு முடியும் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் அமையும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

சமூகவலைதளங்கள் மூலம் அதிமுக ஆட்சிக்கும், முதலமைச்சருக்கும் அவப்பெயர் ஏற்படுத்த திமுக திட்டம் தீட்டி வருவதாக கூறிய அவர் ஆட்சிக்கு வருவோமா, முடியாதா என்ற ஏக்கத்தில் ஸ்டாலின் உள்ளதாக கூறியுள்ளார்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்