பிரித்தானியாவில் தனிமைப்படுத்தும் நாட்கள் குறைப்பா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in பிரித்தானியா

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்த வேண்டிய நாட்களை குறைப்பது குறித்து பிரித்தானியா அரசாங்கம் ஆலோசித்து வருகிறது என்று வடக்கு அயர்லாந்து அமைச்சர் பிராண்டன் லூயிஸ் தெரிவித்தார்.

சுய-தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்களிலிருந்து குறைக்கப்படலாம் என்ற அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த பிராண்டன் இவ்வாறு கூறினார்.

பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, பிரித்தானியாவில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை பிரித்தானியாவில் 8,84,457 கொரோனா வைரஸ் வழக்குகள் 44,795 இறப்புகள் பதிவாகியுள்ளன.

வைரஸில் பாதிக்கப்பட்டுள்ளவருடன் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டவர்கள் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்கும் வேண்டும் என்று பிரித்தானியா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்ககவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சுய-தனிமைப்படுத்த வேண்டிய நாட்களை குறைப்பது குறித்து ஆசோசித்து வருகின்றோம், விஞ்ஞான ரீதியாக முடிவெடுகப்படும் என்று பிராண்டன் கூறினார்.

இது குறித்து ஒரு இறுதி முடிவை அல்லது அறிவிப்பை எடுக்க நாங்கள் இன்னும் தயாராக இல்லை என குறிப்பிட்டார்.

சில நகரத் தொழிலாளர்கள் மற்றும் நிறுவன முதலாளிகளை தனிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து விலக்க முடியும் என்ற அறிக்கையை லூயிஸ் மறுத்தார்.

விதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அது அனைவருக்கும் பொருந்தும் என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்