பிரித்தானியா மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி! அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் கொரோனா தடுப்பு மருந்து: முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள மக்களுக்கு வரும் நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த நோய் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்புகளை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வைரஸ் பாதிப்பை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ரஷ்யா ஏற்கனவே தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ள நிலையில் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பு மருந்து பரிசோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்தான ஆஸ்ட்ரோசென்கா அடுத்த மாதம் பிரித்தானிய மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மருத்துவமனை தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முதல் கட்ட மருந்துகள் நவம்பர் 2-ஆம் திகதி மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வீசிவருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுவரை இங்கு கொரோனாவால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 44,000 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்