பிரித்தானியாவில் புற்றுநோயை வென்ற பெண்... சோகத்தை வெல்ல முடியாமல் எடுத்த துயர முடிவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
287Shares

புற்றுநோயையே வென்றுவிட்ட பெண் ஒருவரால், தன் தந்தை கொரோனாவால் இறந்த சோகத்தை தாள இயலாததால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

பிரித்தானியாவின் சர்ரேயிலுள்ள Wokingஐச் சேர்ந்த Jane Macgregor-White (55) என்ற சட்டத்தரணியாக பணியாற்றும் பெண்ணுக்கு 2017 இறுதியில் மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

புற்றுநோயை வென்றுவிட்ட நிலையில், ஒரு நாள் Janeஇன் கார் ஆறு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வில் அவர் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட மூன்று மடங்கு அதிக மதுபானம் அருந்திருந்தது தெரியவந்தது.

Credit: Hyde News & Pictures Ltd

இந்நிலையில், Janeஇன் மகன் Philip Bateman தாயின் மின்னஞ்சல்களை சோதித்தபோது, அதில் அவர் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் Janeஇன் தந்தை கொரோனாவால் உயிரிழக்க, ஏற்கனவே திருமண வாழ்வும் முடிவுக்கு வர, தந்தையை பிரிந்த சோகத்திலிருந்த Jane, கணவரையும் பிரிந்ததால் சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

தானே காரை ஆற்றுக்குள் செலுத்தி அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததையடுத்து அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Credit: Hyde News & Pictures Ltd

Credit: Hyde News & Pictures Ltd

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்