நடுங்க வைத்த துப்பாக்கிச் சத்தம்... சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் இரு மகன்களும்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1092Shares

அயர்லாந்தில் ஒரு பண்ணை வீட்டில் நடந்த நடுங்கவைக்கு துப்பாக்கிச் சம்பவத்தை அடுத்து தந்தை மற்றும் இரு மகன்களை சடலமாக மீட்டுள்ளனர்.

அயர்லாந்தின் Kanturk நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. திடீரென்று கேட்ட துப்பாக்கிச் சத்தத்தால் பதற்றமடைந்த அண்டை வீட்டார் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், பண்ணை வீட்டின் படுக்கை அறை ஒன்றில் இருந்து 20 வயது கடந்த ஒரு இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலும், பண்ணை வீட்டில் இருந்து சுமார் அரை கிலோமீற்றர் தொலைவில், விளை நிலத்தில் இருந்து அவரது தந்தை மற்றும் சகோதரரின் சடலத்தையும் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து நடந்த சோதனையில், மூன்று துப்பாக்கிகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது அந்த பண்ணை வீட்டின் எஞ்சிய உரிமையாளர்களை தொடர்பு கொள்ளும் நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அப்பகுதி முழுவதையும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தின் பின்னணி தொடர்பில், முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்