கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அறிகுறியற்றவர்களுக்கு ஏற்படும் ஆபத்து! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

Report Print Karthi in பிரித்தானியா
863Shares

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பிற்கான அறிகுறியற்று ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிக விரைவில் தங்களுடைய பிறபொருளெதிரிகளை (Antibodies) இழக்க நேரிடும் என்று தற்போது புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் இம்பிரீயல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக இப்சோஸ் மோரி ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அறிகுறி உள்ளவர்களை காட்டிலும், அறிகுறியற்றவர்கள் பெரிதளவில் தங்களுடைய பிறபொருளெதிரிகளை இழக்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது 18-24 வயதுடையவர்களில் பிறபொருளெதிரிகளின் இழப்பு மெதுவாக இருந்ததாகக் கூறுகின்றன.

இங்கிலாந்தில் கடந்த ஜூன் நடுப்பகுதியிலிருந்து செப்டம்பர் பிற்பகுதி வரை எடுக்கப்பட்ட மாதிரிகளில் பிறபொருளெதிரிகளின் எண்ணிக்கை கால் பங்கிற்கும் அதிகமாக குறைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானிய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை இம்பீரியல் இன்று வெளியிட்டுள்ளது. இந்த முடிவு, கொரோனா தொற்று வைரஸ் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

இளைய சுகாதார அமைச்சர் ஜேம்ஸ் பெத்தேல் இதை "ஒரு முக்கியமான ஆராய்ச்சி பகுதி, இது காலப்போக்கில் கோவிட் -19 பிறபொருளெதிரிகளின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வு குறித்து "எந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி பிறபொருளெதிரிகளை வழங்குகின்றன, அல்லது இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று இம்பீரியல் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் பால் எலியட் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்