பிரித்தானியாவில் இது மட்டும் குறைவாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்: ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் காற்று மாசுபாடு கொரோனா பலி எண்ணிக்கை அதிகப்படுத்தியுள்ளது என முக்கிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது வரை 8,97,740 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,088 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், பிரித்தானியாவில் காற்று மாசுபாடு இல்லை என்றால் 14 சதவீத மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வின் முடிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிபுணர்கள் குழு, காற்று மாசுபாடான இடங்களின் உள்ளூர் செயற்கைக்கோள் படங்களை தொற்றுநோயியல் தரவுகளுடனும் மற்றும் இதய நோய் போன்ற கொரோனாவால் மக்களின் அபாயத்தை உயர்த்துவதாக அறியப்பட்ட சுகாதார நிலைமைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளது.

காற்று மாசுபாடு இல்லாமல் இருந்திருந்தால் கொரோனா தொற்றுநோயின் ஆரம்பம் முதல் ஜூன் முதல் வாரம் வரை, பிரித்தானியாவில் 6,100-க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக PM2.5 எனப்படும் சிறிய துகள்கள் உலக சராசரியான 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருந்தால் இறப்பு எண்ணிக்கை குறைந்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்