கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவில் மறையும்! லண்டன் ஆய்வின் முடிவு

Report Print Raju Raju in பிரித்தானியா
246Shares

கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வை லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்தியது.

மொத்தமாக 3 லட்சத்து 65 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதன் முடிவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடும் என தெரியவந்துள்ளது.

அதாவது எந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் திறன் உருவானாலும், அது சில மாதங்கள் மட்டுமே நீடிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவை ஆய்வாளர்களே அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்