பிரித்தானியாவில் 22 வயது இளம் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட பெரும் அபராதம்! என்ன தவறுக்காக தெரியுமா? எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 22 வயது இளம் பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மீறியதற்காக, அவருக்கு சுமார் 6,600 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தீவிரம் அதிகமாகி வருவதாலும், நாட்டில் இரண்டாம் பரவல் இருப்பதாலும், பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் தீவிரமாகி வருகிறது.

இந்த விதிமுறைகளை மீறினால் அபராதமோ அல்லது அதிகபட்சமாக சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது 22 வயது இளம் பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

(Picture: Instagram)

Carys Ann Ingram என்று அறியப்படும் 22 வயது பெண், சமீபத்தில் Salford-ல் இருந்து Jersey-க்கு பறந்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்று என்பதால், அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, விமானத்தில் அவள் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் கொரோனாவிற்கான சோதனையில் நேர்மறையான முடிவைப் பெற்றுள்ளது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது,

ஆனால், அவர் அது குறித்து எந்த தகவலும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இருப்பினும், அவர் St Ouen’s Bay-வில் இருக்கும் El Tico உணவகத்திற்கு வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

(Picture: Facebook)

இதையடுத்து, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து, சோதனை மேற்கொண்டு வரும் குழுக்கள் இவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளது. ஆனால் முடியவில்லை.

இரண்டாவது எதிர்மறை சோதனையைப் பெறும் வரை அவள் தனிமையில் இருக்க வேண்டும். ஆனால், அவர் தனது பயணத்தின் மூன்றாம் நாளில் St Ouen’s Bay பகுதியில் வெளியில் சென்றுள்ளார்.

(Picture: Getty Images)

எட்டு நாட்களுக்குப் பிறகு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது போன்ற நான்கு குற்றங்களுக்காக அவருக்கு 6,600 டொலர் அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு சிறைக்குச் செல்வதற்கான விருப்பம் வழங்கப்பட்டுள்ளது,

தொடர்பு தடமறியும் குழுவைச் சேர்ந்த கரோலின் மாபியா என்பவர் கூறுகையில், ஒருவர் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் ஒருவர் மற்ற தீவுவாசிகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிப்பது வருந்தத்தக்கது.

இந்த அபராதம், சட்டத்தை மீறியவர்கள் மீது வழக்குத் தொடருவோம் என்பதை நிரூபிக்கிறது. கொரோனா நேர்மறை கொண்ட நபரின் நேரடி தொடர்பு கொண்ட எவரும் அடையாளம் காணப்பட்ட்டால், அவர்கள் பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தியும், அவர் கேட்காமல் வெளியில் சென்றுள்ளார். அவரை தொடர்பு கொள்ள அதிகாரிகள் வீட்டிற்கு சென்ற போது அவர் இல்லாத நிலையில், இன்ஸ்டாகிராம் புகைப்படம் மூலம் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்