கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பிரித்தானியா முடக்கப்படலாம்: இரண்டாவது கொரோனா அலைக்கு தயாராக பிரதமருக்கு வலியுறுத்தல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அரசின் அறிவியல் ஆலோசகர்கள் இரண்டாவது கொரோனா அலைக்கு தயாராகுமாறு பிரதமர் போரிஸ் ஜான்சனை வலியுறுத்திவருகிறார்கள்.

கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையைவிட அதிகம் பலிவாங்கும் அலையாக இருக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.

நாளொன்றிற்கு 500 பேர் வரை உயிரிழக்கலாம் என்றும், நவம்பர் இறுதிவாக்கில் 25,000 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழல் ஏற்படலாம் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 60,000ஐ கடந்ததை பலரும் அறிந்திருக்கலாம்.

ஆகவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மொத்த பிரித்தானியாவும் முடக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றும் அறிவியல் ஆலோசகர்கள் எச்சரித்துள்ளதால் போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகமாகியுள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் வெளியான சில புள்ளிவிவரங்கள் பிரித்தானியாவின் கொரோனா பரவலின் வேகம் குறையத்தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது சற்று ஆறுதலை அளிப்பதாக உள்ளது.

இதற்கெல்லாம் காரணம், நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மூன்றடுக்கு ஊரடங்கு திட்டம் மற்றும் கட்டுப்பாடுகள்தான்.

கட்டுப்பாடுகள் கைக்கொள்ளப்பட்டால் வரும் வாரங்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்